தமிழக சமத்துவ மக்கள் கட்சி (தமிழக சமத்துவ மக்கள் கட்சி) ஒரு அரசியல் கட்சியாக மட்டுமல்ல, சமூக நலனையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் இயக்கமாகவும் திகழ்கிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதியை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பரப்புவது எங்கள் முக்கிய இலக்காகும்..
நிலைத்த சமத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்றம்:
சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கைகள்
தமிழின ஒற்றுமையே தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் தலையாயப்பணி.
தமிழனை அரியணை ஏற்றிடுவோம். தமிழை முழுமூச்சாக வளர்த்திடுவோம்.
மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் சமத்துவமாய் வாழ வழிவகை செய்திடுவோம்.
தமிழை ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்குவதே எங்கள் லட்சியம்.
அரசு துறைகள் எதிலும் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம், அதிகார வரம்பை மீறாத அரசு நிர்வாகம் அமைத்திடுவோம்.
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரமான சூழலை உருவாக்குவோம்.
கல்வியில் சமத்துவமும், சர்வதேச அளவிற்கான தரம் உடைய கல்வியைக் கொடுப்போம்.
நீர் வளத்தை மேம்படுத்துவோம். நீர் மேலாண்மையில் முக்கிய கவனம் செலுத்தி விவசாயம் காப்போம்.
தமிழரின் தொன்மை வரலாற்றை பேணிக் காப்பபோம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தமிழகமெங்கும் வளர்த்திடுவோம்.
வணிகர்களின் நலன் காப்போம். வணிகர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகைச் செய்வோம்.
விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவோம். பாரம்பரிய விளையாட்டுகளையும் காத்திடுவோம்.
நவீன முறையில் சார்சார்பு நிறைந்த கிராமங்களை உருவாக்குதல், தடையற்ற மின்சாரம் வழங்குதல் நேர்மையான தரித நடவடிக்கை எடுப்போம்.
பெண்கள் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம்.
மாற்றுத் திறனாளிகள் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கரைக் கொள்வோம்.
சமத்துவ அரசியல்:
தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரம் அனைவருக்கும் சமமாக பங்கீடு செய்யப்பட வேண்டும். அதிகாரம் சிலர் கையில் குவிவதை தடுக்க, பங்களிப்பை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த ஜனநாயகத்தை எங்கள் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
நல்லாட்சி:
அரசாங்க நிர்வாகம் மற்றும் திட்டங்கள் பொதுமக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். ஊழலை முற்றிலும் ஒழித்து, சரியான அடிப்படையிலான சேவைகளை வழங்க நாங்கள் செயல்படுகிறோம்.
சமூகநலம்:
வறுமையில் உள்ள மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவச சுகாதார சேவைகள், அடிப்படை வசதிகள், மற்றும் நலத்திட்டங்களை வழங்க எங்கள் கட்சி செயல்படுகிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல்:
பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், மாசு குறைப்பு, பசுமைநில அமைப்புகள், மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகள் எங்கள் கட்சி அடிக்கடி முன்னெடுக்கும் பணிகளாகும்.
எங்கள் கட்சியின் கொள்கைகளும், சமூக நலப் பணிகளும் உங்களுக்கு உகந்தவை என்றால், நமது இயக்கத்தில் இணைந்து செயல்படுங்கள். உங்கள் ஆதரவு தமிழகத்தின் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அனைவரும் சமத்துவமாக வாழும் தமிழகத்தை உருவாக்க, உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
No WhatsApp Number Found!
WhatsApp us